தமிழ்நாடு
கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்
கிளாம்பாக்கத்தினை தொடர்ந்து பூவிருந்த மல்லியை அடுத்த குத்தம்பாக்கத்திலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு அடுத்தபடியாக குத்தம்பாக்கத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக குளிர்சாதன வசதிகளோடு கூடிய பேருந்து நிலையம் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், “எங்களின் இலக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட வேண்டும் என்பதுதான். அங்கு குளிர்சாதனம் இணைக்கும் பணியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் கிடைத்த அனுபவத்தினை வைத்து, குறிப்பாக பேருந்து இயக்கப்படுகின்றபோது பயணிகளுக்கு தேவையான பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் நினைவுகூர்ந்து ஆலோசித்து நடவடிக்கைகளை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.