தமிழக அரசு கட்டண உயர்வை அறிவித்த பின்னர் சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்து கட்டணங்களைப் பார்க்கலாம்.
சென்னையிலிருந்து திருச்சிக்கு சாதாரண பேருந்தில் கட்டணம் இதுவரை 175 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 265 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கு 325 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் சாதாரணப் பேருந்துகளின் கட்டணம் தற்போது 380 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டீலக்ஸ் பேருந்துகளில் திருச்சிக்கு செல்லும் கட்டணங்கள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், மதுரைக்கான கட்டணம் 330 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கான கட்டணம் 540 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 430 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல 300 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 380 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரைக்கான கட்டணம் 529 ரூபாயாகவும், நெல்லை செல்வதற்கான கட்டணம் 550 ரூபாயாகவும், கோவைக்கான கட்டணம் 365 ரூபாயிலிருந்து 540 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குளிர்சாதன பேருந்துகளை பொறுத்தவரை சென்னையிலிருந்து திருச்சிக்கான பேருந்து கட்டணம் 450 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 725 ரூபாயாகவும், நெல்லைக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 850 ரூபாயாகவும் கோவைக்கான கட்டணம் 525 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.