வங்கக்கடலில் வருகிற 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக வருகிற 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது வங்கக்கடலில் வருகிற 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறும் எனவும் இது வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.