தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டபேரவை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்
பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்வளர்ச்சி துறைக்கான அறிவிப்புகள்:
விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் தொல்பொருட்களை வைக்க புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பகுதியில் உள்ள அகழ்வைப்பகம் மற்றும் தர்மபுரியில் உள்ள நடுகல் அகழ்வைப்பகம் ஆகியவை ரூ.10 செலவில் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் பழைமையான கட்டிடங்களை அதன் இயல்பு மாறாமல் சீரமைக்க இவ்வாண்டு ரூ.50 கோடி சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும், இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
தமிழ்வழிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வு தொடரும். மேலும் சங்ககால இடங்களை தேடும் பயணத்தில் கொற்கை துறைமுகத்தை தேடும் பணி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுப் பணிகளுக்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.