நெல்லை | அதிசய கிணற்றை மூடிய மணல் - தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி மக்கள் கோரிக்கை!

அதிசய கிணறு முழுவதும் மணல் நிரம்பி உள்ளதால் கிணற்றை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை.
அதிசய கிணறு
அதிசய கிணறுபுதிய தலைமுறை
Published on

அதிசய கிணறு முழுவதும் மணல் நிரம்பி உள்ளதால் கிணற்றை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆயன்குளம் பகுதியில் பல ஆயிரம் கன அடி தண்ணீரை உள்வாங்கியும் நிரம்பாத அதிசய கிணறு ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிணற்றில் எவ்வளவு நீர் சென்றாலும் உள்வாங்கிக் கொண்டே இருந்தது.

இதனால் சென்னை ஐஐடி ஐஐடியில் இருந்து வந்த குழுவினர் அந்த கிணற்றை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்பு இந்த கிணற்றின் முறையாக பராமரித்தால் இந்த பகுதியில் உள்ள கிணற்றின் நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என ஆய்வறிக்கை சமர்ப்பித்தது.

தமிழக அரசு இந்த அதிசய கிணத்தை பாதுகாத்து கீழ்மட்ட நீர் தேக்கமாக உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மூலம் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கியது. கிணறு வரை கால்வாய் வெட்டி கால்வாயில் வரும் தண்ணீர் முழுவதும் கிணற்றுக்குள் செல்வதற்கு பணிகள் நடைபெற்றது.

இரு கரைகளிலும் காங்கிரட் சுவர்கள் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்தில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென வெள்ளம் வந்ததால் கால்வாயில் இருந்த மண் மற்றும் மர கிளைகள் அனைத்தும் கிணத்துக்குள் சென்றுவிட்டது.

30 அடி ஆழம் கொண்ட கிணறு 20 அடி மண்களால் நிரம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உள்ள மண்மேடுகள் இடிந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

கிணற்தை சுற்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாததால் அருகில் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது.

கிணற்றை சுற்றி மண் சுவரும் இடிந்து விழக்கூடிய நிலையில் தான் உள்ளது.

மேலும், அதிசய கிணறு அருகிலேயே மோட்டார் அறை பாழடைந்த நிலையில் காணப்படுகிறது எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து கிணற்றுக்குள் விழக்கூடிய சூழ்நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கூறியதற்கு நிதி அவ்வளவு தான் இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டனர். நல்லா இருந்த கிணத்தை மண்ணை கொட்டி மூடி விட்டு சென்றதாக விவசாயிகள் வருத்தத்துடன் கூறினர்.

NGMPC22 - 147

இதுகுறித்து விவசாயி ஈஸ்வரன் கூறும்போது, கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக அதிசய கிணற்றுக்கு முழுவதும் கிணற்றில் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மண்கள் கிணற்றுக்குள் விழுந்து தற்போது தண்ணீர் செல்லாதவாறு அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் விரைவாக கிணற்றில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் கேட்டபோது. இன்னும் இரண்டு நாட்களில் கிணற்றை தூர் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com