பெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..!

பெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..!
பெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..!
Published on

ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் பறித்த நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் உதயராஜ். இவருக்கு இணையதளம் மூலம் ப்ரியா என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் ப்ரியா உதயராஜிடம், ஆபாசமாக உரையாட 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் வீடியோ காலில் பேச 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதற்கு உதயராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் பிரியாவிடம் இருந்து உதயராஜ்க்கு பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பிரியாவிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக காவல்துறையினரிடம் உதயராஜ் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், உதயராஜிடம் தொலைபேசியில் பெண் குரலில் பேசியவர் நெல்லை மாவட்டம் பணகுடியைச் ராஜ்குமார் ரீகன் என்பது தெரியவந்தது.

பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்குரலில் பேசி பணம் பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொலைபேசியில் பேசுதல், ஆபாச படங்களை பகிர்தல், மிரட்டுதல் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்கியிருப்பதாகவும் பெண்போல் பேசி பணம் பறிப்பதை சென்னையில் ‌தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது இரு பெண்கள் மூலம் கற்றுக்கொண்டதாகவும் உதயராஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரை கைது செய்த காவல்துறையினர், மோசடி செய்த பணத்தை பறித்தல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com