மாஞ்சோலை | ஆக்ரோஷமாக துரத்திய காட்டுயானை; சிறு காயங்களுடன் உயிர் தப்பிய அரசுப்பேருந்து நடத்துனர்!

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் அரசு பேருந்து நடத்துனரை காட்டுயானை துரத்தியதில் நடத்துனர் சிறிய காயங்களுடன் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடத்துனர் சிறிய காயங்களுடன்  சிகிச்சை
நடத்துனர் சிறிய காயங்களுடன் சிகிச்சைpt desk
Published on

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் இயங்க இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரையும் இரண்டு காட்டு யானைகள் துரத்தியுள்ளது. இதில், சுதாரித்துக் கொண்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரும் தப்பியோடிய நிலையில் நடத்துனர் பாடலிங்கம் பேருந்தினுள் ஏறும்போது யானை தாக்கியுள்ளது.

Govt bus
Govt bus

இதில், பேருந்தின் உட்பகுதியில் தவறி விழுந்த நடத்துனர் லேசான காயமடைந்துள்ளார். அதன் பின் பேருந்துக்குள் சென்று கதவுகளை மூடியதால் உயிர் தப்பினார். இருப்பினும் பேருந்து கதவை யானை தாக்கியதில் கதவு சேதமடைந்தது. இதனிடையே பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால் யானைகள் திரும்பிச் சென்றன.

இதையடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை மீட்டு மாஞ்சோலை அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com