தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்றார் 90 வயது நெல்லை மூதாட்டி

தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்றார் 90 வயது நெல்லை மூதாட்டி
தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்றார் 90 வயது நெல்லை மூதாட்டி
Published on

தமிழ்நாட்டின் மிக மூத்த பஞ்சாயத்து தலைவியாக நெல்லையைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். மொத்தம் 2060 வாக்குகள் பதிவான நிலையில் 1568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

90 வயதில் தான் பெற்ற வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. எனக்கு தற்போது 90 வயதாகிறது. ஏழு பரம்பரையாக எங்கள் குடும்பத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். நான் தற்போது முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளேன். ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com