திருச்செந்தூரில் வளர்ப்பு நாயை திட்டியதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காணியாளர் தெருவைச் சேர்ந்தவர் பால் லிங்கம். இவர் வளர்த்து வந்த நாயை, அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ்
என்பவர் நாயே எனவும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் லிங்கராஜூடன் பால் லிங்கம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், பழைய பகையுடன் சுற்றிய லிங்கராஜ், பால் லிங்கத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்லிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
காவல்துறையினர்,உயிரிழந்த பால் லிங்கத்தின் உடலை உடற்கூறு ஆய்விற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த லிங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.