இந்தியாவில் மருத்துவம் கற்க நீட் தேர்வே தடையாக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் மருத்துவம் பயில சென்ற கர்நாடக மாணவன் நவீன், அங்கு நடைபெற்ற ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு நீட் தேர்வே காரணம் என கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக வெளிநாட்டில் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, " வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90% மாணவர்கள், இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள்" என்று தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் கருத்து பரவலாக கண்டனம் எழுந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.