சட்டப் போராட்டம் மூலமே நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சட்டப் போராட்டம் மூலமே நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சட்டப் போராட்டம் மூலமே நீட் தேர்வு ரத்து நடவடிக்கை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி சட்டப் போராட்டம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

தமிழகம் முழுவதும் 600 நாட்களுக்கு பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வந்துள்ளனர். நீண்ட காலமாக மாணவர்கள் வீடுகளில் இருந்ததால் மன அழுத்தத்தில் இருந்தனர் தற்போது பள்ளிக்கு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வந்திருந்தாலும் மகிழ்ச்சியுடன் பாடங்களை கவனித்து வருகின்றனர்.

நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் தற்கொலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் முதல்வரை பொறுத்தவரை தமிழகத்தில் சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மாணவர்கள் தயவு செய்து தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதை விட மாணவர்களின் உடல் நலம் முக்கியம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com