''ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?'-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி

''ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?'-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி
''ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையை பார்த்தாரா? இல்லையா?'-ஆளுநருக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி
Published on

நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி பார்த்தாரா? என்று திமுக வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக வழக்கறிஞர் வில்சன் பேசுகையில், ''தமிழக சட்டமன்றத்தில் நீர் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 6மாதம் தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு கூட அனுப்பாமல் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது அதை நிராகரித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சட்டப்படி, குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைப்பது மட்டுமே அவருக்குட்பட்ட அதிகாரம்.

ஆனால், அவராகவே முடிவெடுத்து அனுப்பவது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் மேற்கொள் காட்டியிருந்தால் அது தவறு. ஆளுநர், ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த அறிக்கையை படித்தாரா தெரியவில்லை. அதில், 80ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். அதை படித்தாலே நீட் தேர்வின் பாதகம் புரியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் வேண்டுமென்ற செயல்படுகிறார் என்பதைத்தான் நாங்கள் புரிந்துகொள்கிறோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com