நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை, ஆனால் மறுப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, கொல்லங்கோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய கே.எஸ்.அழகிரி, நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டார்.
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் மத்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுவது இயலாது என்பதால் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று அவர் விளக்கமளித்தார்.