திருநெல்வேலி செய்தியாளர் மருதுபாண்டி
திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ஜல் (JAL NEET ACADEMY) என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை, கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் நடத்திவருகிறார். இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஓர் ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் மாணவர்களை கம்பால் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதனால் மாணவர்களுக்கு உடலில் கை, கால், முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது, அதேபோல் இந்த பயிற்சி மையத்திற்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சிமைய வாசலிலே தங்களது காலணிகளை விட்டுவிட்டு வர வேண்டும். ஆனால் அதில் சிலர் காலணிகளை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணியுடன் வந்த ஜலாலுதீன், அதை மாணவிகள் மீது வீசி எறியும் காட்சியும் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முழுத் தகவலையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.