கூவம் கரைப்பகுதியை தூய்மை செய்த தேசிய பேரிடர் மீட்புக் குழு 

கூவம் கரைப்பகுதியை தூய்மை செய்த தேசிய பேரிடர் மீட்புக் குழு 
கூவம் கரைப்பகுதியை தூய்மை செய்த தேசிய பேரிடர் மீட்புக் குழு 
Published on

மத்திய அரசின் ஜலசக்தி அபியான் திட்டத்தின்கீழ் தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் சென்னை கூவம் நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. சென்னை பெரியார் பாலம் அருகே கூவம் நதிக்கரையை தூய்மைப்படுத்தும் பணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய அவர், கூவத்தைக் காப்பாற்றுவதற்கான விரிவான திட்டம் இல்லாததுதான் ஆற்றில் மாசு தடையின்றி தொடரக் காரணம் என்றார். கூவம் ஆற்றை அடுத்த 3 முதல் 4 மாதங்களில் இரண்டு முறை தேசிய பேரிடர் மீட்புக் குழு சுத்தம் செய்யவுள்ளதாகவும், அதனால் கூவத்தில் மாசு குறையும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com