கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் : சுகாதாரத்துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம்

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் : சுகாதாரத்துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம்
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் : சுகாதாரத்துறைக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம்
Published on

விருதுநகர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்டு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 

தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, விருதுநகர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார். அத்துடன் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அதிகாரிகள் சார்பில் தேசிய பெண்கள் உரிமைகள் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணிக்கு தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சாத்தூர் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ரத்தப் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவர், தனக்கு அந்த ரத்தத்தின் மூலம் எச்.ஐ.வி வந்துள்ளதாக புகார் தெரிவித்தார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகளில் உள்ள அனைத்து ரத்த பாட்டில்களையும் சோதனை செய்யும்படி, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com