கைத்தறி தினம்: சேமித்துவைத்த பணத்தில் கைத்தறி மாஸ்க் வாங்கி, இலவசமாக விநி்யோகித்த சிறுமி

கைத்தறி தினம்: சேமித்துவைத்த பணத்தில் கைத்தறி மாஸ்க் வாங்கி, இலவசமாக விநி்யோகித்த சிறுமி
கைத்தறி தினம்: சேமித்துவைத்த பணத்தில் கைத்தறி மாஸ்க் வாங்கி, இலவசமாக விநி்யோகித்த சிறுமி
Published on

இன்று தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, தான் சிறுக சிறுக சேமித்துவைத்த பணத்தில் கைத்தறி மாஸ்க் மற்றும் துண்டுகள் ஆகியவற்றை வாங்கி, அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி அசத்தியுள்ளார் மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவர்.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த 4 -ம் வகுப்பு மாணவியான உஷா, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பொதுமக்கள் உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவியை செய்திருக்கிறார். இதற்காக ஓவியப்போட்டியில் தான் பெற்ற பரிசுத்தொகையான ரூ.1000 மற்றும் தான் சேமித்து வைத்திருந்த ரூ.500 ஆகியவற்றை சேர்த்து ரூ.1,500க்கு, கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட துண்டு மற்றும் முக கவசங்களை அவர் வாங்கியுள்ளார்.

வாங்கிய அப்பொருட்களை, இன்று காலையில் செல்லூர், நரிமேடு, கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று இலவசமாக வழங்கியுள்ளார் சிறுமி உஷா. கைத்தறி துணிகளை பொதுமக்களிடம் வழங்கியபோது, “நீங்கள் அனைவரும்கூட, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதரத்திற்கு உதவிடும் வகையில் கைத்தறி ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்” என வேண்டுகோளும் விடுத்திருக்கிறார் சிறுமி உஷா.

தேசிய கைத்தறி தினத்தன்று கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சிறுமி மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு நெசவாளர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com