நத்தம்: 422 வருட பாரம்பரியமிக்க பாதயாத்திரை பக்தர்களின் ‘வேல்’ காணவில்லை என புகார்

நத்தம்: 422 வருட பாரம்பரியமிக்க பாதயாத்திரை பக்தர்களின் ‘வேல்’ காணவில்லை என புகார்
நத்தம்: 422 வருட பாரம்பரியமிக்க பாதயாத்திரை பக்தர்களின் ‘வேல்’ காணவில்லை என புகார்
Published on

422 வருடத்திற்கு மேலாக பாரம்பரியம் மிக்க பாதயாத்திரை பக்தர்களின் வேலை காணவில்லை என நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பக்தர்கள்.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கட்டளை காவடியில் மேலச்சுவரி, வளையப்பட்டி, புதுப்பட்டி, நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பலநூறு ஆண்டுகளாக வேலுடன் பழனிக்கு காவடி பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு கடந்த 13ஆம் தேதி கிளம்பி நத்தம் வழியாக பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள், சமுத்திராபட்டியில் நேற்று (14 ஆம் தேதி) இரவு தங்கியிருந்தனர். அப்போது தாங்கள் கொண்டு வந்த 422 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க தாமிரப் பட்டையால் செய்யப்பட்ட 3 அங்குலம் உயரம் கொண்ட இரண்டு வேல்கள், ஒரு வெள்ளி பீடம் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று நெற்குப்பை கட்டளை காவடி குழுத்தலைவர் பூசாரி செட்டியார் தலைமையில் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நத்தம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் வைத்து அபிஷேகம் செய்யும் வேல் காணவில்லை என்பதால் காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களும் பாதயாத்திரை பக்தர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். பலமணி நேரம் தேடலுக்குப் பின்பும் வேல் கிடைக்காததால் மாற்று ஏற்பாடாக புதிய வேல்கள் பூஜை செய்யப்பட்டு தங்களது காவடி பாதயாத்திரையை நெற்குப்பை கட்டளை காவடி குழுவினர் பழனியை நோக்கிச் தொடங்கினர்.

மேலும் பாரம்பரியமிக்க வேல் கிடைத்துவிட்டால் தாங்கள் புதிதாக கொண்டு செல்லும் வேல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காணிக்கையாக செலுத்தப்படும், பழைய வேல் பாரம்பரிய முறைப்படி மீண்டும் பூஜை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com