சிவப்பு விளக்கு பயன்படுத்த விஐபிக்களுக்கு தடை

சிவப்பு விளக்கு பயன்படுத்த விஐபிக்களுக்கு தடை
சிவப்பு விளக்கு பயன்படுத்த விஐபிக்களுக்கு தடை
Published on

விஐபிகள் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தை பயன்படுத்த மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், முதலமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆகியோர் மட்டுமே இனி சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் பயணிக்க முடியும். மற்ற மத்திய அமைச்சர்களோ, விஐபிகளோ சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com