தமிழகம் முழுவதும் உள்ள ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுவாகவே ஊர்களின் பெயர்கள் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் ஒரு மாதிரியும் அதனையே ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போதும் எழுதவும் போது வேறு மாதிரி இருந்து வருகிறது. புதுப்பேட்டை என்று தமிழில் மக்கள் உச்சரிக்கும் பட்சத்தில் (Pudupet) புதுப்பேட் என்று ஆங்கிலத்தில் இருக்கும். திருச்சி என்பது Trichy என்றே இருக்கும்.
இந்நிலையில், ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக எழும்பூரை ஆங்கிலத்தில் ‘எக்மோர்’ எனக் குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என எழுதாமல் திருவல்லிக்கேணி என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். இதைப் போல் தமிழகம் முழுவதும் உள்ள பெயர்களைத் தமிழ் ஒலிக்கு ஏற்ப உச்சரிக்கவும் எழுதவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தமிழ் ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.