ஆட்டோவை வீடாக மாற்றி வடிவமைத்துள்ள நாமக்கல் இளைஞர்!

ஆட்டோவை வீடாக மாற்றி வடிவமைத்துள்ள நாமக்கல் இளைஞர்!
ஆட்டோவை வீடாக மாற்றி வடிவமைத்துள்ள நாமக்கல் இளைஞர்!
Published on

வீடு இல்லாத‌வர்கள் குறைந்த செலவில் வசிப்பதற்கு நடமாடும் இருப்பிடம் ஒன்றை பொறியியல் பட்டதாரி ஒருவர் வடிவமைத்து வருகிறார்

ஏடுகளில் கற்றதை, நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளாக மாற்றுவதே கல்வியின் சிறப்பாகும். அவ்வாறாக, நாமக்கல்லைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண்பிரபு என்பவர், ஆட்டோ ஒன்றை நடமாடும் வீடாக வடிவமைத்து உள்ளார். கட்டடக் கலையில் பட்டம் பெற்ற இவர், நவீன வசதிகளுடன் கூடிய வீடாக ஆட்டோவை மாற்றியிருக்கிறார்.

User

குறைந்த இடத்தில் நிறைந்த வசதிகளுடன் இருக்கும் இந்த ஆட்டோ வீடு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டில், சமையல் செய்யும் இடம், படுக்கை மெத்தைகள், கழிப்பிடம், துணிகளை உலர வைக்கும் இடம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஆட்டோவின் மேல் பகுதியில் மொட்டை மாடியில் உள்ள வசதிகளும் இடம்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக அமைகிறது. இவ்வீட்டிற்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய மின்சக்தி மூலமாக தயாரிக்கப்படுகிறது.

User

வீடற்ற ஏழைகளுக்கும், வெவ்வெறு இடங்களுக்கு சென்று தொழில் செய்யும் சிறு வியாபாரிகளுக்கும் ஆட்டோ வீடு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் பொறியியல் பட்டதாரி அருண்பிரபு. பொறியியல் படிப்பிற்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என கூறப்படும் வேளையில், ஆர்வத்துடன் கல்வி கற்றால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக இந்த ஆட்டோ வீட்டின் வடிவமைப்பாளர் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com