முட்டை விலை கடும் வீழ்ச்சி – ஒரே நாளில் எத்தனை காசுகள் குறைந்தது?

முட்டை விலை கடும் வீழ்ச்சி – ஒரே நாளில் எத்தனை காசுகள் குறைந்தது?
முட்டை விலை கடும் வீழ்ச்சி – ஒரே நாளில் எத்தனை காசுகள் குறைந்தது?
Published on

நாமக்கல் மண்டலத்தில் மீண்டும் வீழ்ச்சி அடையும் முட்டை விலை, ஒரே நாளில் 20 காசுகள் சரிந்து 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி முட்டை பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக இதே விலை நீடித்து வந்தது. இந்நிலையில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 60 காசுகளாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைவது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும் போது... தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சத்துணவு திட்டத்திற்கு முட்டைகள் அனுப்புவது வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் தமிழகம், கேரளாவிலும் முட்டை விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்து அதிகளவு முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற மண்டலங்களிலும் விலை குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும், இவ்விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com