நாகை: டெம்போ வாகனத்தில் மீன் விற்கச் சென்ற மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

நாகை: டெம்போ வாகனத்தில் மீன் விற்கச் சென்ற மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
நாகை: டெம்போ வாகனத்தில் மீன் விற்கச் சென்ற மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

நாகை அருகே மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்த விபத்தில் மீனவப் பெண்மணி சம்பவ இடத்துலேயே உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 8 பேர் இன்று அதிகாலையில் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பள்ளிக் கூடம் அருகே வரும்போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்துள்ளது.

இதனால் நிலை தடுமாறிய வாகனத்தின் அச்சு முறிந்து ஒரு புறமாக சாய்ந்து கவிழ்ந்துள்ளது. இதில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கல்பனா என்ற மீனவப் பெண்மணி தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 7 மீனவப் பெண்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. விபத்து குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் டெம்போ வாகனம் கவிழ்ந்து உயிரிழந்த பெண்மணியின் உறவினர்கள் கதறி அழுதது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com