நாம் தமிழர் கட்சியின் “பனை திருவிழா” - பனை விதையை நட்டுவைத்தார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் “பனை திருவிழா” - பனை விதையை நட்டுவைத்தார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் “பனை திருவிழா” - பனை விதையை நட்டுவைத்தார் சீமான்
Published on

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று பனை விதைகளை நடும் பனைத் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த நாராயணபுரம் ஏரியில் பனை விதைகள் நடப்பட்டன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விழாவில் பங்கேற்று, பனை விதையை நட்டு தொடங்கிவைத்தார். அவருடன் ஏராளமானோர் பங்கேற்றனர். 

இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதியினரான மஞ்சு ரேகா மற்றும் சந்தோஷ் ஆகியோரும், சீமானுடன் சேர்ந்து பனை விதைகளை விதைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பனை மரம் என்பது தமிழர்களின் தேசிய மரமாக இருக்கிறது. அது மண் அரிப்பை தடுத்து, நிலத்தடி நீரை வளப்படுத்துகிறது. பனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதை செய்கிறோம். ‘சந்திரயான் 2’ முயற்சியை தோல்வியாக பார்க்கக்கூடாது. முயற்சியே வெற்றி தான். அடுத்த முறை நமது விஞ்ஞானிகள் கட்டாயம் வெல்வார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com