பைக்கில் சென்ற நாம் தமிழர் வேட்பாளர் - லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு

பைக்கில் சென்ற நாம் தமிழர் வேட்பாளர் - லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு

பைக்கில் சென்ற நாம் தமிழர் வேட்பாளர் - லாரி மோதிய விபத்தில் உயிரிழப்பு
Published on

ஆண்டிப்பட்டி அருகே மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விபத்தில் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது36). இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடமலை மற்றும் மயிலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடமலை மற்றும் மயிலை ஒன்றிய 10வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிமுக வேட்பாளர்களும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டிருந்தனர்.

இந்நிலையில் குபேந்திரன் வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து கிராமத்திற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் மஞ்சனூத்து கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரும் உடன் சென்றிருந்தார். மஞ்சனூத்து அருகே சென்றபோது எதிரே காய்கறி ஏற்றிக்கொண்டு வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குபேந்திரன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து சென்ற முருகன் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் தங்கவேல் என்பவரை கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com