வானில் சுற்றிய மர்மப்பொருள்: நெல்லையில் திடீர் பீதி!

வானில் சுற்றிய மர்மப்பொருள்: நெல்லையில் திடீர் பீதி!
வானில் சுற்றிய மர்மப்பொருள்: நெல்லையில் திடீர் பீதி!
Published on

நெல்லை மாவட்டத்தில் மர்ம பொருள் ஒன்று அதிக வெளிச்சத்துடன் வானில் சுற்றி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு 10 மணியில் இருந்து 10.30 மணிவரை விமானம் போன்ற மர்ம பொருள் வெளிச்சத்துடன் 3 முறை சுற்றி வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள், அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதே போல் கடந்த 2015 டிசம்பர் மாதம் விமானம் போன்ற மர்ம பொருள் மேற்கு தொடச்சி மலையில் சுற்றி வருவதாக பொதுமக்கள் ஆதாரத்துடன் தொடர்ந்து தெரிவித்தனர். அதன் காரணமாக நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் விக்கிரமன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கு தொடர்ச்சி மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எந்தவித மர்ம பொருட்களும் கிடைக்காததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வானில் பாத்தது போக்குவரத்து விமானம் என்றும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அன்றிருந்து இன்றுவரை அதற்கு எந்த ஒரு தெளிவான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மர்ம விமானம் மேற்கு தொடச்சி மலையில் பறந்து இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மர்ம விமானம் பறந்த பகுதியின் அருகில் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் இருப்பதால் பாதுகாப்பை உறுதி படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com