எடப்பாடி காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் - போலீசார் தீவிர விசாரணை

எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதுதொடர்பாக தடவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Police station
Police stationpt desk
Published on

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

நேற்று இரவு சேலம் மாவட்டம் எடப்பாடி தலைமை காவல் நிலையத்தில் காவலர் ராமச்சந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென காவல் நிலையத்தின் அருகே வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையறிந்த காவலர் ராமச்சந்திரன், வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

Petrol bomb
Petrol bombpt desk

இதையடுதது உடனடியாக எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் தடவியல் நிபுணர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Police station
செங்கல்பட்டு | வடமாநில தொழிலாளியைத் தாக்கி 1000 ரூபாயை பறித்த காவலர் - உடனடியாக பாய்ந்த நடவடிக்கை!

சட்ட ஒழுங்கை காப்பாற்றும் காவல் நிலையத்தின் மீதே மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com