மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் புராதான மயில் சிலை அங்குள்ள தெப்பக்குளத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த தொன்மை வாய்ந்த மயில் சிலை மாற்றப்பட்டு, உண்மையான சிலை திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழு தங்களது விசாரணையை 6வார காலத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து கோயிலின் தெப்பக்குளத்தில் சிலை தேடும் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என ஆலோசித்து வருகின்றனர்.