'மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது'-குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

'மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது'-குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

'மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது'-குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
Published on

கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் வீட்டில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கனு தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி உட்பட ஏழு பேர் கொண்ட குழுவும் விசாரணை மேற்கொண்டது.

இவர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர், மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரியங்கனு தெரிவிக்கும்போது, "முதற்கட்டமாக மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து காவலர், மருத்துவர், பள்ளி நிர்வாகம், பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது. அதனை பற்றி அந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் விசாரணை செய்த பிறகு தான் முடிவுக்கு வர முடியும். சூழ்நிலையை பார்க்கும் போது காவல் துறையினர் சில தவறுகளை செய்துள்ளனர்" என தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து மாணவியின் வழக்கறிஞர் கேசவன் தெரிவிக்கும் போது, "தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த குழுவினர் இன்று ஸ்ரீமதியின் பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி இறந்தது முதல் கடைசியாக அடக்கம் செய்தது வரை அனைத்து விவரங்களையும் அவர்களிடம் தெரிவித்து விட்டோம். அறிகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துச் சென்றனர்" என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com