நிரந்தர மீன் மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும் - மயிலாப்பூர் தொகுதி மக்கள் கோரிக்கை

நிரந்தர மீன் மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும் - மயிலாப்பூர் தொகுதி மக்கள் கோரிக்கை

நிரந்தர மீன் மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும் - மயிலாப்பூர் தொகுதி மக்கள் கோரிக்கை
Published on

சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் டிஜிபியுமான ஆர். நடராஜனின் தொகுதி மயிலாப்பூர். புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் திருமயிலை என்று அழைக்கப்படக்கூடியது இந்த மயிலாப்பூர் தொகுதி.

இந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள 7 மாநகராட்சி வார்டுகளில் 2,69,400 வாக்காளர்கள் உள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. 540 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட தார்ச்சாலைகள், சிறுவர் மன்றங்கள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மீனவர்கள் கணிசமாக வசிக்கும் இந்த பகுதியில் நிரந்தர மீன் மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

மேலும் நீண்டகாலமாக குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் இத்தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com