சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை ரூ.950..!

சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை ரூ.950..!
சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை ரூ.950..!
Published on

வெளிமாநிலங்களில் இருந்து‌ ஆடுகள் கொண்டு வருவது குறைந்ததால், சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ‌‌950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் இறைச்சிக்காக ஆடுகள் கொண்டு வரப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், வெளிமாநிலங்களில்‌ ‌‌இருந்து ஆடுகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.‌

வரத்து குறைவு உள்ளிட்ட ‌‌கா‌‌ரணங்களால், ஆட்டு இறைச்சி விலை அதிகரித்துள்ளது. ஊரடங்கிற்கு முன், சென்னையில் 600 ரூபாய் என்ற அளவில் இருந்த ஒரு கிலோ ஆட்டு இறைச்சி விலை, தற்போது 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மஹாவீர் ஜெயந்தியையொட்டி வரும் திங்கள்கிழமை இறைச்சிக் கடைகளை திறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் இறைச்சிக் கடைகளை ஏப்ரல் 14ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் திங்கள்கிழமை மட்டும்தான் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்ததால், இவ்வாரம் இறைச்சிக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் இன்று முதல் 14 தேதி வரை இயங்காது என மீன் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com