இஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் !

இஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் !
இஸ்லாமிய மக்களும் நீராடிய தாமிரபரணி மஹா புஷ்கரம் !
Published on

தாமிரபரணி புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை மேலச்செவலில் மதவேற்றுமை இன்றி இஸ்லாமிய மக்கள் தாமிரபரணி நதிக்கரையில் சிறப்பு தொழுகை நடத்தி புனித நீராடினர்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறைநடக்கும் தாமிரபரணி மஹா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. பக்தர்கள் நீராடுவதற்காக நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 149 படித்துறைகள் 64 தீர்த்தக்கட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புனித நீராடுவதற்காக உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளிமாவட்ட மக்கள் ,வெளிமாநிலத்தவர்கள் நெல்லையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் மேலச்செவலில் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதவேற்றுமை இன்றி  இஸ்லாமிய சமூகத்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் சிறப்பு தொழுகை நடத்தி புனிதநீராடி வழிபாடு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ''இந்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலனவர்கள் சென்னையில் உள்ளோம். புஷ்கர விழா நடைபெறுவதையொட்டி தாமிரபரணி நதிக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து புனித நீராடியுள்ளோம். தாமிரபரணி நதியானது உலகம் இருக்கும்வரை செழிப்போடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை நடத்தியுள்ளோம். இது ஜாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட விழா'' என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com