”வரிகள் இல்லைனா பாடல் இல்லை; பாடலாசிரியர்களும் உரிமை கேட்டால்?”- இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

பாடல்கள் விற்பனை மூலம் வணிகரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளையராஜா
இளையராஜாமுகநூல்
Published on

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்தபிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ”தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறது” என கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இளையராஜா
இளையராஜா

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதையும் படிக்க: தங்கைக்குத் திருமணம்.. மோதிரம், டிவி பரிசளிக்க விரும்பிய அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவியின் குடும்பம்!

இளையராஜா
“காப்புரிமை விவகாரத்தில் என் உரிமைதான் மேலானது என்ற வகையிலேயே கருத்து தெரிவிக்கப்பட்டது” - இளையராஜா

இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ”இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் எங்களுக்குச் சொந்தமாகிவிட்டது” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ”இசையமைப்பு என்பது க்ரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமைச் சட்டம் பொருந்தாது” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”அப்படி என்றால் வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” எனக் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கும் சொந்தம் என்பது இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: கோட்டக் மஹிந்திரா வங்கியின் சில சேவைகளுக்குத் தடை.. ரிசர்வ் வங்கி அதிரடி! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இளையராஜா
"அனைவரையும் விட தாம் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைக்கிறார்” - எக்கோ நிறுவனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com