ஊரகத் தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரகத் தூய்மை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.
தமிழகத்திலுள்ள 31 ஊரக மாவட்டங்களில் உள்ள 800க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் தூய்மை கணக்கெடுப்பு நடைபெற்றது.
குறிப்பாக, பள்ளிகள், அங்கன்வாடிகள், போன்றவற்றில் நேரடி கள ஆய்வு, கிராமப்புற மக்களின் தூய்மை குறித்து கேட்டறிதல், தூய்மைக்கான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் கிடைக்கப்பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.