கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் பல நூறு டன் கழிவுகளை நகராட்சி நிர்வாகமே கொட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடலூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் சாக்கடை கழிவுகள், நகராட்சிப் பகுதியிலுள்ள கால்வாய் சீர்செய்யப்படும்போது அகற்றப்படும் குப்பைகள் உள்ளிட்டவைகளை டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு, கெடிலம் ஆற்றில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை நகராட்சி நிர்வாகமே கொட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பு அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்டவை அருகிலேயே இருந்தும் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை யாரும் தடுக்கவில்லை என்பது வேதனையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.