உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி

உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி
உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி
Published on

மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது இந்திரா பானர்ஜி உள்ளார். இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக
நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதனால் இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக விரைவில் அறிவிக்கப்படுவார்.
இந்திரா பேனர்ஜி தவிர்த்து மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.
உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.எஸ்.கவுல் கடந்த கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது,
இந்திரா பேனர்ஜி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில் இந்திரா பேனர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், அவருடைய இடத்திற்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com