“சமஸ்கிருதம் ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?” எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டுமென மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்
Su Venkatesan
Su VenkatesanTwitter
Published on

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் பயிலும் மாணவர்களுக்காக பாடங்களை பயிற்றுவிப்பதற்கு பகுதி நேர கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

MGR university
MGR university

அந்த அறிவிப்பில் கல்வித் தகுதி : 1. Diploma / Bachelor of Visua Arts in respective courses, தமிழ், ஆங்கிலம், இந்தி மற் றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களில் முதுநிலை அல்லது M.Phil., பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டுமென அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள கண்டன டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கௌரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com