"அப்புச்சி வீட்டில்தான் எங்களுடைய தீபாவளி"- நினைவுகளை பகிரும் எம்.பி.ஜோதிமணி

கரூர் எம்.பி ஜோதிமணி தீபாவளி குறித்து தன்னுடைய பழைய நினைவுகளைப் புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார்.
எம்.பி.ஜோதிமணி
எம்.பி.ஜோதிமணிfile image
Published on

இந்தியா முழுவதும் நாளை [நவ12] தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் ஆடைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள், பட்டாசுகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகள், பழக்கடைகள், வெடிக்கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் அதிகரித்துக் காணப்படுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.பி.ஜோதிமணி
பலரது உயிரைக் காப்பாற்றி விட்டு இறுதியாக தன் உயிரை விட்ட காவலர் - திருப்பத்தூரில் நிகழ்ந்த சோகம்!

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீபாவளிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு, தீபாவளி தொடர்பாக தன்னுடைய பழைய நினைவுகளை கரூர் எம்.பி ஜோதிமணி புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், “சிறு வயதில் தீபாவளியை பெரும்பாலும் என்னுடைய அப்புச்சி வீட்டில் தான் கொண்டாடுவோம். அப்புச்சி வீட்டில் தான் நான் வளர்ந்தேன். தீபாவளி, பொங்கல் எல்லாம் அங்குதான் கொண்டாடுவோம். அப்புச்சி வீட்டில் பெரியப்பா மகன்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடுவோம். தீபாவளி அன்று 4 மணிக்கே எழுந்து தூக்கக் கலக்கத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வார்கள். அது ஒன்றுதான் சிரமமாக இருக்கும்.

தாயுடன் ஜோதிமணி
தாயுடன் ஜோதிமணி

பிறகு பட்டாசு, பட்சணம் என்று அன்றைய பொழுது இனிமையாகக் கழியும். அதிகாலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் குளிப்பது ஒன்றுதான் கஷ்டமாக இருக்கும்."ஏன்டா தீபாவளி வருகிறது" என நினைப்போம். அன்றைய தினத்தில் என்ன குறும்பு செய்தாலும் அம்மா அடிக்கமாட்டார்கள். என்னுடைய அம்மா இறந்த பிறகு தீபாவளி என்பது மற்றொரு சாதாரண தினமாகத்தான் உள்ளது. அதன் பிறகு தீபாவளி பெரிதாகக் கொண்டாடுவதில்லை. ஆனால் தீபாவளி கொண்டாடுபவர்களைப் பார்த்து சந்தோசம் அடைகிறேன்" என்றார்.

எம்.பி.ஜோதிமணி
மதுரையில் ஆவின் பால் விநியோகம் 3 மணி நேரம் தாமதம்.. என்ன காரணம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com