தனியார் பள்ளி மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய மலைத் தேனீக்கள் - 60 பேர் காயம்

தனியார் பள்ளி மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய மலைத் தேனீக்கள் - 60 பேர் காயம்
தனியார் பள்ளி மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய மலைத் தேனீக்கள் - 60 பேர் காயம்
Published on

மத்தூர் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களை மலைத் தேனீக்கள் கொட்டியதால் 60 மாணவர்கள் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1000-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், மாலை பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலமாக காற்று வீசியது. இதில், பள்ளி அருகே தேக்கு மரத்திலிருந்து மலைத் தேனீக்கள் திடீரென கலைந்துள்ளது. இதையடுத்து அதிலிருந்து வெளியேறிய மலைத் தேனீக்கள் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொட்டியுள்ளது.

தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டியதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்பறைக்குள் ஓடி ஒளிந்தனர். விபரம் அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்று மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் முதலுதவி பெற்று வீட்டிற்கு திரும்பிய நிலையில் ஐந்து மாணவர்கள் மட்டும் படுகாயம் அடைந்ததால் உன் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனியார் பள்ளியில் மாணவர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com