“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்

“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்
“வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை” - தொழில்துறை அமைச்சர் சம்பத்
Published on

வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவையில் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான வகுப்புகள் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளன. அரசூர் அருகே ஜி.கே.டி. தொழில்நுட்ப வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வகுப்புகளை தொடங்கி வைத்தனர். 

இதைத் தொடர்ந்து பேசிய எம்.சி.சம்பத், தேசிய அளவில் விற்பனை குறைந்ததால், வாகன உற்பத்தி துறையில் மந்தநிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறினார். வாகன உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப‌ம் மாறியதும், மீண்டும் பழையபடி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் வாகன உற்பத்தி துறையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் விரைவில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ஆலை அமையவுள்ளது என்றும், அப்போது அதிக அளவில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com