கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கழகத்தில் அவரின் 109 வது பிறந்தநாள் விழாவை மாணவிகள் விமர்சையாக கொண்டாடினர்.
அன்னை தெரசாவின் 109 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. 18 வயதில் இந்தியாவுக்கு வந்த அன்னை தெரசா, ஆசிரியப்பணி மூலம் தனது சேவையை தொடங்கினார். அல்பேனியாவில் பிறந்த அவர், இந்தியாவில் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வகையில், 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அன்னை தெரசாவின் 109ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் உள்ளது. 1984 ஆம் ஆண்டு அன்னை தெரசா கொடைக்கானலுக்கு வந்தபோது, இந்த பல்கலை கழகத்தின் அடிக்கல்லை நட்டு வைத்தார். மேலும் இந்த பல்கலைகழகத்திற்கு அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகம் என அவரது பெயரையே, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் சூட்டி கௌரப்படுத்தினார்.
அன்னை தெராசாவின் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னை தெரசா குறித்த பேச்சு போட்டிகள் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் வைதேகி விஜயகுமார், பதிவாளர் சுகந்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், சென்னையில் உள்ள அன்னை தெராசா மகளிர் கல்லூரியிலும் அன்னை தெராசாவின் 109 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.