பச்சிளம் குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பது எப்படி?: தாய்மார்களின் கவனத்திற்கு

பச்சிளம் குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பது எப்படி?: தாய்மார்களின் கவனத்திற்கு
பச்சிளம் குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பது எப்படி?: தாய்மார்களின் கவனத்திற்கு
Published on

தாய்க்கு சரியாக பாலூட்டத் தெரியாத காரணத்தால் சென்னையில் ஒரு குழந்தை மூச்சுத் திணறி இறந்துள்ளது. பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப் பால் தருவதையே ஒரு தேவையற்ற காரியமாக கருதுகிறார்கள். அதன் இன்னொரு வடிவம்தான் இந்தச் சம்பவம். தனிக் குடும்ப முறை அதிகரிக்க ஆரம்பித்த பிறகு குழந்தை வளர்ப்பு முறை குறித்து போதிய விழிப்புணர்வு இளம் தம்பதிகளிடம் இருப்பதில்லை. ஆகவே ஒரு பச்சிளம் குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் தருவது? அதற்கான சரியான முறை என்ன? பச்சிளம் குழந்தை நலம் சுஜா மரியனிடம் கேட்டோம்.  

தற்போதைய சூழலில், 80% தாய்மார்கள் சரிவர தாய்ப் பால் அளிப்பதாகவும் இது குறித்து போதிய விழிப்புணர்வு இருப்பதாகவும் மீதமுள்ள 2௦% தாய்மார்களுக்கு மட்டுமே பாலூட்டும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு தேவைப்படுவதாக சுஜா மரியன் கூறுகிறார். மேலும் பிறந்தக் குழந்தையாக இருக்கும் போது அந்தக் குழந்தை அழும்போது மட்டும் பால் கொடுத்தால் போதும். குழந்தை சிறுநீர் சரியாக போனால் அதற்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைப்பதாக எடுத்து கொள்ளலாம். குறிப்பாக தேவைக்கு அதிகமாக தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் அளிக்க வேண்டும். இதையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பால் கொடுத்த பிறகு அசைவுகளை கட்டுப்படுத்தினால் புரையேறும் என கூறும் மருத்துவர்கள் தொட்டிலில் குழந்தைகள் இருந்தால் எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றார்.

குழந்தைகளை படுக்க வைக்கும் போது, எப்போதும் சரிசமமான மெத்தையில் அல்லது தரையில் படுக்க வைக்க வேண்டும். மேலும் பால் பவுடரை சரியாக கலக்காமல் இருந்தால் புரையேற வாய்ப்பு உள்ளதாகவும், பால் பாட்டிலில் காத்து அதிகம் புகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின்படி முறையான வழிமுறைகளில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது தாய்மார்கள் பல அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என்கிறார் மருத்துவர் சுஜா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com