வடசென்னையை சுற்றிவளைத்த கொசு : ஒரு ‘கடி’ சர்வே..!

வடசென்னையை சுற்றிவளைத்த கொசு : ஒரு ‘கடி’ சர்வே..!
வடசென்னையை சுற்றிவளைத்த கொசு : ஒரு ‘கடி’ சர்வே..!
Published on

சென்னையில் உள்ள கொசுக்களின் சராசரி அளவு குறித்து இந்திய பொது சுகாதார சங்கம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சென்னையில் டிராபிக் ஜாம், தூசு, மழை பெய்தால் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் ஏற்படும் சிரமங்கள் அவதி என சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு நிகரான ஒரு பிரச்னையாக இருப்பது கொசுக்கடி என்றும் சொல்லலாம். சென்னையை முதலில் மழை தாக்கும், பின்பு அந்த மழை நீரில் உருவாகும் கொசு மனிதனை தாக்கும். பகல் நேரங்களில் அம்பியாக இருக்கும் கொசுக்கள், இரவு நேரங்களில் அந்நியனாக மாறி கடிக்கின்றன. குறிப்பாக கூவம் மற்றும் சாக்கடை சார்ந்த பகுதிகளில் கொசுக்களின் படையெடுப்பு அளவிட முடியாத ஒன்றாக இருக்கும். இந்நிலையில் சென்னையில் கொசுக்களின் தாக்கம் குறித்த அளவீடு ஒன்றை பொது சுகாதார சங்கம் கணக்கெடுப்பு செய்துள்ளது.

இதில் வடசென்னையில் தான் அதிக கொசுக்கள் உலாவுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பகுதிகள்                                    வீடுகளில்              குடோன்களில்             மனிதர்களை கடிப்பது  (1 மணி நேரம்) 

தண்டையார் பேட்டை                23                                   35                                              4                 

வண்ணாரப்பேட்டை                   24                                   37                                              5            

ராயபுரம்                                         18                                   22                                              3

திருவொற்றியூர்                           19                                   18                                              4

தொரைப்பாக்கம்                          15                                   24                                              3

மடிப்பாக்கம்                                  11                                   20                                              2

இந்த ஆய்வில் குறைந்த அளவு கொசுக்கள் இருக்கும் இடமாக தென்சென்னை பகுதி விளங்குகிறது. அடையாறு, பெசண்ட் நகர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கொசுக்களின் ஆதிக்கம் குறைவாக காணப்படுகிறது.

பகுதிகள்                      வீடுகளில்              குடோன்களில்             மனிதர்களை கடிப்பது  (1 மணி நேரம்) 

அடையாறு                        5                                    5                                               0

பெசண்ட் நகர்                    3                                    3                                               0         

அண்ணா நகர்                    3                                    5                                               0    

நுங்கம்பாக்கம்                  5                                    9                                               1

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து அதிகளவில் முட்டையிடும் பகுதியாக திகழ்வது ரயில் நிலையங்களாக உள்ளன. கொசுக்கள் கடிப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அனைவரும் அவர்கள் இருப்பிடங்களை சுற்றி தூய்மையாக வைத்துக்கொண்டால், கொசுக்களின் உற்பத்தியை குறைக்கலாம் என சுகாதார ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com