பொதுத் துறைகளை அடமானம் வைப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை - திருமாவளவன்

பொதுத் துறைகளை அடமானம் வைப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை - திருமாவளவன்
பொதுத் துறைகளை அடமானம் வைப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை - திருமாவளவன்
Published on

பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதோ அல்லது அடமானம் வைப்பதோ மக்களுக்கு எதிரான நடவடிக்கை அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில் கேந்திரி வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தபடும் என்றார். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்த கேள்விக்கு, சமூக நீதியை முறையாக நடைமுறைபடுத்துவதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியமானது அதை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதோ அல்லது அடமானம் வைப்பதோ மக்களுக்கு எதிரான நடவடிக்கை அதனை ஒரு போதும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணைக்கு அனிதா பெயரை முதல்வர் வைப்பார் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com