Wow..! 2 வயதிலேயே 10 சாதனைகளை தன்வசமாக்கிய கோவை சிறுவன்!

கோவை சேர்ந்த சித்தார்த் என்னும் சிறுவன் உலக வரைப்படங்களை அடையாளப்படுத்தும் அதீத திறமையால் 10 சாதனைகளை தன் வசமாக்கிய சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த்
சித்தார்த் முகநூல்
Published on

கோவை சேர்ந்த சித்தார்த் என்னும் சிறுவன் உலக வரைப்படங்களை அடையாளப்படுத்தும் அதீத திறமையால் 10 சாதனைகளை தன் வசமாக்கிய சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன் ராஜலட்சுமி தம்பதியினரின் குழந்தைதான் 2 வயதான சாய் சித்தார்த். இவர்கள் கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வருகின்றனர்.

சாய் சித்தார்த்தின் தந்தை மணிகண்டன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தன்னை தாயாரிக்கும் வகையில் பல புத்தங்களை படிப்பது வழக்கம். இதற்காக வாங்கப்பட்ட இந்திய, உலக வரைபடங்கள், தேசிய கொடிகள் போன்ற புத்தகங்களின் உதவியால் படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுவனுக்கு உலக வரைபடங்கள் போன்ற பல விஷயங்களை அடையாளம் காண்பதில் ஆர்வம் அதிகம் இருப்பதை உணர்ந்து கொண்ட தம்பதி குழந்தைக்கு மேலும் இதனை வலுப்படுத்த பல பயிற்சிகளை 2 வயதிலே கொடுத்துள்ளனர்.

சித்தார்த்
பெண் நிரூபரிடம் அத்துமீறல்.. ரோபோவும் இப்படியா? என்னதான் நடக்குது இங்க!

இதனையடுத்து, தற்போது சிறுவன், இந்திய வரைபடத்தினை பார்த்து 21.7 வினாடிகளின் மாநிலங்களின் பெயர்களையும், 11.42 வினாடிகளின் உலக வரைபடத்தில் உள்ள கண்டங்களின் பெயர்களையும் கூறி கின்னஸ் அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட 10 சாதனைகளை தன்வசம் ஈர்த்துள்ளார். 2 வயதில் சிறுவனின் இந்த சாதுர்யம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com