நிலவின் தென் துருவத்திலிருந்து எடுத்துவரப்பட்ட கனிமங்களை சீன அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சீனாவின் chang`e-6 மூலம் கடந்த ஜூன் மாதம் நிலவின் தென் துருவத்திலிருந்து 2 கிலோ கனிமங்களுடன் சீனாவின் விண்கலமானது பூமியை வந்தடைந்தது.
அந்த கனிமங்களை பல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி இதன் ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக சீனா வானியல் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளதால் வட துருவத்திலும், தென் துருவத்திலும் ஒரே மாதிரியான கனிமங்கள் இருக்கின்றனவா அல்லது வெவ்வேறு கனிமங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவரும் என்பதால் வானியல் ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.