சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 6 ஆயிரத்து 402 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளதாகவும், வரும் 2026ம் ஆண்டு இதனை 46 சதவீதமாக உயர்த்தும் இலக்குடன் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 43.48 கிலோமீட்டர் தூரத்திற்கு இரு வழித்தடங்களில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.