ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, அவர்களை கண்காணிக்குமாறு பெற்றோரை சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 நிலைகள் கொண்ட இணையதள விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களைக் கையாளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளை மட்டும் அனுமதிக்குமாறும், அதைவிட மைதானங்களில் விளையாட பிள்ளைகளை ஊக்கப்படுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வலைதள பயன்பாட்டால் பிள்ளைகளின் செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும் எனவும், அவர்கள் நீண்ட நேரம் இணையதளத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூவேல் விளையாடும் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், இந்த அறிவுறுத்தலை காவல்துறை வெளியிட்டுள்ளது.