இரவு நேரங்களில் வங்கிக் கணக்குகளை குறிவைத்து பணம் திருட்டு- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

இரவு நேரங்களில் வங்கிக் கணக்குகளை குறிவைத்து பணம் திருட்டு- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
இரவு நேரங்களில் வங்கிக் கணக்குகளை குறிவைத்து பணம் திருட்டு- அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
Published on

தஞ்சையில் ஒரே பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து, நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சைப் பகுதியில் பொதுப்பணித்துறை ஊழியராகப் பணியாற்றி வருபவர் பாலசுப்ரமணியன். இவர் கடந்த 14 ஆம் தேதி வழக்கம் போல் காலை எழுந்து தனது அலைப்பேசியை பார்த்துள்ளார். அப்போது அவரது அலைப்பேசிக்கு தொடர்ச்சியாக குறுந்தகவல் வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தகவல்களை கிளிக் செய்து பார்த்த போது, அவரது வங்கிக்கணக்கில் இருந்து 13 ஆம் தேதி இரவு 11.27 மணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், 11.28 10 ஆயிரம் ரூபாயும், 11.29 மணிக்கு 10 ஆயிரம் ரூபாயும் ஆகமொத்தம் மொத்தம் 30 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பாலசுப்ரமணியன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து ஏடி எம் கார்டை உடனடியாக பிளாக் செய்யுமாறு கூறியது மட்டுமல்லாமல் வங்கியிலும், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இது குறித்து புகார் அழித்துள்ளார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப்பணமானது புத்தூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்ததும் இதே பாணியில் தஞ்சையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் மோசடி நடந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட அயூப்கான் என்பவர் கூறும் போது “ எனது வங்கிகணக்கில் இருந்து 40,000 திருடப்பட்டுள்ளது. மோசடி குறித்து புகார் அளித்தும், வங்கி நிர்வாகமோ காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறினார்.

வங்கி தரப்பில் அதிகாரிகள் கூறும் போது “ வாடிக்கையாளர்களின் புகார் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com