இருபது ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்ட மசோதாவை நிறைவேற்ற போராட வேண்டியுள்ளது, கவலையளிக்கிறது என்று கூறியுள்ள ஸ்டாலின், சர்வதேச ரீதியாக எல்லா பெண்களுக்கும் பொருளாதார, சமூக மற்றும் பாலின நீதியை பெற்றிட கடினமான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற வில்லை என்று கூறியுள்ள அவர், நம் நாட்டின் அரசியல் பதவிகளில் பெண்கள் பங்கேற்க வழிவகை செய்யும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற பிரதமர் தலையிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.